நான் புறப்படுகிறேன் என கூறிய மனைவி..! அவர் மூக்கை கடித்து துப்பிய கணவன்..! அதிர்ச்சி சம்பவம்..! பதற வைக்கும் காரணம்!

குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் மூக்கை கணவர் கடித்துத் துப்பிய சம்பவமானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் லக்கீம்பூர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்திற்குள் அமைந்துள்ள நீம்கான் என்ற இடத்திற்குட்பட்ட முத்தியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி தேவி. இவருடைய வயது 34. இவருடைய கணவரின் பெயர் மூல்சந்த். கடந்த பல மாதங்களாகவே கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறுகள் வெடித்த வண்ணமிருந்தன.

6 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சரோஜினி தேவி தன்னுடைய கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பலர் அவருக்கு எடுத்துக்கூறியும் கணவருடன் சேர்ந்து வாழ்வதை சரோஜினி தேவி ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் சரோஜினி தேவியின் பெற்றோர் ஊர்த்தலைவரிடம் நிலைமையை எடுத்து கூறியுள்ளனர். பின்னர் அவர் இருவரையும் அழைத்து சமாதானம் பேசியுள்ளார். ஊர்த்தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சென்ற புதன்கிழமை சரோஜினி தேவி தன்னுடைய கணவருடன் இணைந்து வாழ்வதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமையன்று இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்றுள்ளது. சரோஜினி தேவி மீண்டும் தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்தமூல்சந்த் தன்னுடைய மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி அவருடைய மூக்கை கடித்து மென்று துப்பியுள்ளார்.

துண்டிக்கப்பட்ட மூக்குடன் அருகிலிருந்தோர் சரோஜாதேவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அப்பகுதி காவல்நிலையத்தில் மூல்சந்த் மீது புகாரளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மூல்சந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட சரோஜினி தேவியின் உடல்நிலை தற்போது சீராகவுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.