கல்யாணம் ஆகி ஒரு வருசம் ஆகியும் கணவனுடன் ஒன்னும் நடக்கல..! விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு! திண்டுக்கல் திகுதிகு!

திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணமான ஒரே ஆண்டில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி என்ற பகுதியில் ராணுவ வீரரான லட்சுமணன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் ஈஸ்வரி என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ராணுவ வீரரான லக்ஷ்மிமனன் நாட்டிற்கு சேவை செய்வதற்காக தன் குடும்பத்தைப் பிரிந்து இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு பணியிலிருந்து விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு குடும்பத்தை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். லட்சுமணன் அவரின் மனைவியுடன் சந்தோசமாக விடுமுறை நாட்களை கழித்துள்ளார். விடுமுறை முடிந்து அவர் மீண்டும் காஷ்மீரில் பணிக்காக செல்ல முடிவெடுத்திருக்கிறார். 

இதனை அறிந்த அவரது மனைவி ஈஸ்வரி, தானும் தன்னுடைய கணவருடன் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் லட்சுமணனிடம் கூறியபோது அவர் தன்னுடன் ஈஸ்வரியை அழைத்துச் செல்ல மறுத்திருக்கிறார். லட்சுமணன் தன்னுடைய சொந்த ஊரிலிருந்து காஷ்மீருக்கு பணி நிமித்தமாக சென்று இருக்கிறார்.

இதனால் அவரது மனைவி ஈஸ்வரி மிகுந்த வருத்தத்திலும் கோபத்திலும் இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்றைய முன் தினம் லட்சுமணன் தன்னுடைய மனைவி ஈஸ்வரிக்கு போன் செய்திருக்கிறார். அப்போது போனில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் சண்டையாக மாறி இருக்கிறது. இதனால் மனமுடைந்த ஈஸ்வரி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

இதனையடுத்து ஈஸ்வரியின் உடல் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தகவலறிந்த ஈஸ்வரியின் உறவினர்கள் அந்தப் பெண்ணின் தற்கொலைக்கு லட்சுமணனே காரணம் எனக் கூறி போராட்டம் நடத்தினர். திருமணமாகி ஒரே ஆண்டில் இத்தகைய சோக சம்பவம் நடைபெற்றுள்ளதை அடுத்து இந்த பகுதி மக்கள் பெரும் துயரத்தில் மூழ்கி உள்ளனர்.