தம்பி மனைவியையும் விடவில்லை..! கணவனை கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்!

கள்ளக்காதலன் மற்றும் தம்பியுடன் இணைந்து சொந்த கணவரையே பெண்ணொருவரை கொலை செய்துள்ள சம்பவமானது திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டத்தில் சின்னமூக்கானூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ரமேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் நித்யா. இருவருக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதனிடையே ரமேஷ்குமாருக்கு அதீத மதுப்பழக்கம் இருப்பதை கண்டு நித்யா கோபமடைந்தார்.

இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட தொடங்கின. மேலும் நித்யாவின் தம்பி மனைவி மீது ரமேஷ்குமாருக்கு தவறான பார்வை இருந்துள்ளது. தன்னுடைய காம இச்சைக்கு அவரை உட்படுத்த பலமுறை ரமேஷ்குமார் முயற்சித்துள்ளார்.

இதனால் நித்யாவும், அவருடைய தம்பியும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இது நடிகை காலப்போக்கில் நித்யாவுக்கு தம்பியின் நண்பரான கணபதி என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ரமேஷ்குமாரின் தொல்லையை நித்யாவால் சகித்து கொள்ள இயலாமல் போனது.

கணபதி, நித்யா மற்றும் நித்யாவின் தம்பி ஆகிய மூவரும் இணைந்து ரமேஷ்குமாரை கொலை செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். 2 முறை ரமேஷ்குமார் அருந்திய மதுவில் விஷம் கலந்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் ரமேஷ்குமார் 2 முறையும் தப்பித்துவிட்டார். 

இதனால் ஆத்திரமடைந்த நித்யாவின் தம்பி அவருடைய தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். டாஸ்மாக் கடையின் பின்புறத்தில் சடலத்தை வீசிவிட்டு 3 பேரும் தப்பி சென்றுள்ளனர். சாலையோரத்தில் சடலம் இருப்பதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மேற்கூறப்பட்ட தகவல்களை நித்யா வாக்குமூலமாக கொடுத்துள்ளார். அதன் பின்னர் நித்யா மற்றும் அவரது தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர். 

கணபதி தலைமறைவாகியுள்ள காரணத்தினால் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவமானது திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.