35 வயது அத்தை மீது மோகம்! மாமனை ஆள் வைத்து கொன்ற 20 வயது மருமகன்!

அத்தை மீதான மோகத்தில் மாமனை ஆள் வைத்து கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.


சில தினங்களுக்கு முன்பு புதுடெல்லியில் மர்ம நபர்களால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த நிகழ்வானது செர்வன்ட் குவார்ட்ர்ஸ் ("servant quarters") என்ற இடத்தில் நடந்தது. இந்தப் பகுதி புதுடெல்லியின் தெற்கு அவென்யுவில் அமைந்துள்ளது.

அப்பகுதியில் குமார் என்கிற ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சு (வயது 35) என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஓர் இரவில் அஞ்சு அவளுடைய குழந்தையுடன் நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்கள் குமாரை கழுத்தை சீவி கொலை செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த அப்பகுதியில் காவல்துறையினர் அஞ்சுவிடம் விசாரித்தனர்.அப்போது அஞ்சு,"குமார் என்னிடம் மிகுதியாக சண்டை போடுகிறார். அவர் சூதாட்டத்தில் ஈடுபடுவது எனக்கு அறவே பிடிக்கவில்லை. என் வீட்டிற்கு முகம் தெரியாத நபர்கள் எவ்வளவோ பேர் தினமும் வந்து போகின்றனர்.

இதனை எதிர்த்ததனால் குமார் என்னை நிறைய முறை அடித்துள்ளார். நான் சொல்வதைக் கேட்டு இருந்தால் இன்று கணவனை பிரிந்து வாழும் நிலை எனக்கு ஏற்பட்டிருக்காது. சூதாட்டத்தில் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என்றும் வாக்குமூலம் அளித்தார்.

காவல்துறையினர் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்ட போது பல்வேறு உண்மைகள் வெளிவந்தன. அதாவது அஞ்சு கள்ளக்காதல் செய்து வந்ததாகவும், இது குமாருக்கு தெரியவந்து எச்சரித்ததாலேயே இருவருக்குள் சண்டை அதிகமானது என்றும் தெரியவந்துள்ளது.

சூதாட்டத்தில் அதிக ஈடுபாடுடைய குமாரை விட்டு விட்டு தன் கள்ளக்காதலனான சிவம் (வயது 20) என்பவரை மணக்க அஞ்சு தயாரானாள். ஒரு நாள் சிவமிடம், தன் கணவனை கொன்று விடுமாறு கூறியுள்ளார். சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை பொழுது முழுவதும் யாருடனோ அஞ்சு, கைப்பேசியில் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

மாலை நேரத்தில் தன் குழந்தையுடன் நடைபயிற்சி சென்ற போது, முகமூடி அணிந்த இருவர் அவர்கள் ப்ளாட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதில் ஒருவர் 18 வயது நிரம்பாத இளைஞன் என்று கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவர்கள் குமாரின் அறைக்கு சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்த விவரங்களை அப்பகுதி காவல்துறை ஆணையர் செய்தியாளர்களிடம் வழங்கினார்.

இதனிடையே அஞ்சுவின் கள்ளக்காதலன் சிவம் அவருக்கு மருமகன் முறை என்பது தெரியவந்துள்ளது. அதாவது சிவத்திற்கு அஞ்சு அத்தை முறையாகிறது. கணவனின் கொடுமை குறித்து மருமகனிடம் கதறி அழுதுள்ளார். ஆதரவாக இருப்பதாக கூறிய சிவம் ஒரு கட்டத்தில் அஞ்சுவிடம் தகாத உறவை ஏற்படுத்திக் கொண்டு தற்போதுஅவரது கணவனையே ஆள் வைத்து கொன்றுள்ளார்.