கட்டிலில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! சடலமாக கிடந்த கணவன்..! மனைவியின் செயலால் பரிதவிக்கும் பிள்ளைகள்! சேலம் அதிர்ச்சி!

சேலம் மாவட்டத்தில் கணவரை கொன்று விட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைவாகியுள்ள மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் பூங்கொடி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோதம்பலம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பூங்கொடிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவருக்கும் இடையே இருந்த கள்ளக்காதலால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து ஒன்றாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய மனைவி பூங்கொடி வேறு ஒரு இளைஞருடன் தவறான உறவில் ஈடுபடுவதை அறிந்த சேட்டு அவரை கண்டித்திருக்கிறார். கணவர் கண்டித்தும் அடங்காத பூங்கொடி மீண்டும் தன்னுடைய கள்ளக்காதலனுடன் உறவில் இருந்து வந்துள்ளார். இதுபோல் சம்பவ தினத்தன்று பூங்கொடி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். 

பின்னர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவரை, கள்ளக்காதலன் உதவியோடு கொலை செய்தது மட்டுமல்லாமல் தன் கள்ளக் காதலனுடன் தலைமறைவாகி உள்ளார். கடந்த 2 தினங்களாக சேட்டின் வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரது வீட்டிலிருந்து அழுகிய துர்நாற்றம் வீசியுள்ளது. துர்நாற்றத்தை தாங்க முடியாமல் அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சேட்டின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர்.

உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது, சேட்டின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. பின்னர் போலீசார் அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கணவரை கொன்று விட்டு பூங்கொடி தன்னுடைய கள்ளக்காதலனுடன் தலைமறைவாகியுள்ளார். தந்தையும் இறந்து தாயும் தலைமறைவாகி இருக்கும் நிலையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஏங்கித் தவிக்கும் அந்த குழந்தைகள் நிலை பார்பதற்கு மிகவும் பரிதாபமாக உள்ளது என்று தான் கூற வேண்டும்.

போலீசார் கள்ளக்காதலனுக்காக கட்டிய கணவரை கொலை செய்த பூங்கொடியை வலை வீசி தேடி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.