அடித்து உதைத்த மனைவி! கள்ள்க் காதலியை பாய்ந்து காப்பாற்றிய கணவன்! தெருவுக்கு வந்த குடும்ப சண்டை!

கணவரையும் அவருடைய கள்ளக்காதலியையும் பெண்ணொருவர் தோழியருடன் இணைந்து நடுரோட்டில் தாக்க முயன்ற சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிழக்கு சீனாவில் பன்சாங் கவுன்டி என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு வாழ்ந்து வரும் ஒருவருக்கு திருமணமாகிய போதிலும் வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்து வந்துள்ளது. இதனை கண்டுபிடித்த மனைவி பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளார். அதுபோன்று தன் தோழிகளுடன் கணவனும் அவருடைய கள்ளக் காதலியும் ஒன்றாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் மனைவியின் தோழிகள் அனைவரும் கள்ளக்காதலியை சரமாரியாக தாக்குகின்றனர். கள்ளக்காதலியை மனைவியிடமிருந்து காப்பாற்றுவதற்காக அந்த நபர் அவர் மீது படுத்து கொள்கிறார். மேலும் பாதிக்கப்பட்ட மனைவியின் தோழியர் கள்ளக்காதலியை மானபங்கப்படுத்தும் நோக்கத்தில் அவருடைய ஆடைகளை கிழிக்கவும் முயல்கின்றனர். கள்ளக்காதலியை தாக்கும் அதே நோக்கத்துடன் மனைவி மற்றும் அவரது தோழியர் அவருடைய கணவரையும் தாக்குகின்றனர்.

இந்த சம்பவத்தின் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.