விவாகரத்து பெற்று சென்ற மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து வலைத்தளங்களில் கணவர் வெளியிட்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் நம்பருடன் மனைவியின் அந்த புகைப்படங்களை வெளியிட்ட பகீர் கணவன்! அதிர வைக்கும் காரணம்!
சென்னை வண்ணாரப்பேட்டையில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 38. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணமான சில ஆண்டுகள் சந்தோஷமாக இருந்தாலும், அதன் பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அவற்றினால் இருவருக்குள்ளும் தகராறுகள் ஏற்பட்டன. இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்து பெற்றதால் மதன் சுமதியின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்
விவாகரத்திற்கு பின்னர் மதன் வண்ணாரப்பேட்டையிலும், சுமதி செங்கல்பட்டில் டெய்லராகவும் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
சில வாரங்களுக்கு முன்னர் மனைவியின் மீது இருந்த ஆத்திரம் அதிகரிக்க, சமூக வலைத்தளங்களில் சுமதியின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டார். புகைப்படங்களுக்கு கீழ் அவருடைய முகவரியையும், செல்போன் எண்ணையும் கொடுத்திருந்தார்.
இதனால் பலர் சுமதியின் செல்போனுக்கு கால் செய்து தொல்லை கொடுத்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்னர் குடிபோதையில் மர்ம நபர் ஒருவர் சுமதியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை அடித்து நொறுக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சுமதி நிகழ்ந்தவற்றை குறித்து செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையும் சம்பவங்கள் அனைத்திற்கும் சுமதியின் முன்னாள் கணவர் மதன் தான் காரணம் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக மதனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.