என் புருசன் வாரத்துக்கு ஒரு முறை தான் குளிக்குறான்! எனக்கு விவாகரத்து வேணும்! நீதிமன்றம் சென்ற மனைவி

கணவன் வாரத்துக்கு ஒருமுறைதான் குளிப்பதாகக் கூறி விவகாரத்து கோரியிருக்கிறார் பெண் ஒருவர்


விவாகரத்துக்கு வழக்கமான பல காரணங்கள் உண்டு. குடி பழக்கம், வேறு பெண்ணுடன் தொடர்பு, ஆண்மை இல்லை, கருத்து வேறுபாடு, என பல்வேறு காரணங்கள் கூறப்படுவதுண்டு. குறட்டை கூட விவாகரத்துக்கு காரணமாக கூறப்படுவதுண்டு. இந்நிலையில் போபால் குடும்ப நல் நீதிமன்றத்துக்கு வித்தியாசமான காரணத்துடன் ஒரு விவாகரத்து வழக்கு வந்தது. 

போபாலை அடுத்த பாரிகார் என்ற இடத்தை சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது கணவர் வாரம் ஒருமுறை மட்டுமே குளிப்பதாகவும், ஒழுங்காக ஷேவ் செய்வதில்லை என்றும் புகார் கூறியும், அவருடன் வாழ முடியாது என்று தெரிவித்தும் ஒரு விவாக ரத்து வழக்கை தொடர்ந்தார். 

கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு குழந்தையில்லை இந்நிலையில் அவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒப்புதலுடன், குடும்ப நல நீதிமன்றத்தை நாடிய நிலையில் அவர்களை 6 மாதம் பிரிந்து இருக்கும் படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு விவாகரத்து குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக விவகாரத்து கேட்ட தம்பதிகளிடம் அவர்களது பெற்றோர்கள் சமரசம் பேசிய நிலையில் அதனை அந்தப் பெண் ஏற்கவில்லை.