மனைவியின் சடலத்துடன் 2 இரவுகள் குடும்பம் நடத்திய கணவன்! ஒரு மாநிலத்தையே உலுக்கிய சம்பவம்!

மனைவியின் சடலத்துடன் 2 நாட்கள் வசித்து வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் குன்னபள்ளி என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு 68 வயதான சரோஜினி தன்னுடைய கணவரான ஸ்ரீதரன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். 15 வருடங்களாக இதே பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் சரோஜினி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

தன்னுடைய மனைவி தன்னைவிட்டு பிரிந்ததை தாங்கிக்கொள்ள இயலாத ஸ்ரீதரன், அவருடைய சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்து வந்துள்ளார். மனைவியை இழந்த பிறகு தனக்கு வேறு யாருமில்லை என்பதால் ஸ்ரீதரன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். 

ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய முக்கியமான ஆவணங்களை தீயிலிட்டு கொளுத்தியுள்ளார். 

இதனால் 2 நாட்கள் கழித்து தன்னுடைய வளர்ப்பு நாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவமறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரொம்பவும் அழகு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.