விபத்தில் பலியான காதல் கணவன்! அதே இடத்தில் தீக்குளித்த மனைவி! உருக வைத்த நிகழ்வால் தவிக்கும் 3 குழந்தைகள்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சனமங்கலம் என்னும் ஊரில் வசித்து வரும் பிரியா என்பவர் தன் கணவர் இறந்த துக்கம் தாளாமல் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


முத்துச்செல்வம் மற்றும் பிரியா தம்பதியினர் சனமங்கலம் என்னும் ஊரில் வசித்து வருகின்றனர்.  இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு செந்தமிழ் செல்வன் , ஆனந்த செல்வன் , வெற்றி செல்வன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். 

சமீபத்தில் முத்துச்செல்வன் ட்ராக்டர் ஒன்றில் தன் நண்பர்கள் மூவருடன் பயணித்து உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் முத்துச்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கணவர் இறந்த துக்கம் தாளாது பிரியா மிகவும் விரக்தி  அடைந்துள்ளார். கணவர் இறந்த பின் அவர்  எம் ஆர் பாளையத்தில் உள்ள தன்னுடைய மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ப்ரியா தன் கணவரை அடக்கம் செய்த மயானத்திற்கு சென்று அங்கு மண்ணெண்ணையை  தன் மீது ஊற்றி தீ குளித்து உள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திலேயே பிரியா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த வழக்கை போலீசார் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியா இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.