3 குழந்தைகளை ஒவ்வொருவராக கொலை செய்தேன்..! கணவனை பிரிந்த மனைவி அரங்கேற்றிய படுபயங்கரம்!

விவாகரத்தால் மனமுடைந்த தாய் 3 பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஆஷ்லே என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரின் பெயர் மெர்வின். இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே இருவருக்குமிடையே விரிசல்கள் ஏற்பட தொடங்கின. வழக்கமான கணவன் மனைவிகளை போன்று இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளன. 

2017-ஆம் ஆண்டில் வாழ்க்கையின் மீது வெறுப்புற்று ஆஷ்லே, மெர்வினிடம் விவாகரத்து கோரினார். அதன்பிறகு அடுத்த 6 மாத காலங்களுக்குள் மெர்வின் மீது மீண்டும் விவாகரத்து கோரினார். இதனிடையே விவாகரத்து நிபந்தனைகளாக மெர்வின், "குழந்தைகளை தானே வைத்துக்கொள்வதாகவும், தன்னுடைய குடியிருப்பிலே வசிக்க வேண்டுமென்றால் வாடகை தர வேண்டும்" என்று கோரியுள்ளார்.

இவை ஆஷ்லேவிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர், தன் 3 பிள்ளைகளை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த செய்தியானது டெக்சாஸ் மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.