கர்ப்பத்தை சிதைத்து இளம் பெண் கொலையா? திருமணமான 7 நாட்களுக்குள் அதிர்ச்சி சம்பவம்!

திருமணம் நடந்த 7 நாட்களுக்குள் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை அடுத்துள்ள திரிசூலத்தில் அபின்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினிவேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதேப்பகுதியை சேர்ந்த மனிஷா என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது.5 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

சென்ற ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி மனிஷாவை அபின்ராஜ் ஏமாற்றியுள்ளார். உறவினரின் வீட்டிற்கு சென்று இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 6 மாதங்களுக்கு முன்னர் மனிஷா கர்ப்பமானார். இதனால் இருவருக்கும் இடையே தகராறுகள் ஏற்பட்டன. அப்போது மனிஷாவை காலால் எட்டி உதைத்துள்ளார். உதைத்ததில் ஏற்பட்ட அதிர்வினால் கரு சிதைந்து போனது.

ஒரு வாரத்திற்கு முன்னர் அபின்ராஜ் மனிஷாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நேற்று இரவு யாரும் இல்லாத நேரத்தில் மனிஷா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த மோனிஷாவின் தங்கை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மனிஷாவின் செல்போனை அவருடைய தந்தை பறிமுதல் செய்து பார்த்தார்.

அப்போது அதிலிருந்த ஒரு ஆடியோ அவரை நிலைகுலைய செய்தது. அபின்ராஜுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும் அந்த பெண்ணின் அறிவுரைபடி தன்னை எட்டி உதைத்து கருசிதைவு செய்தார் என்பதும் தெரிந்துள்ளது. 

இந்த ஆதாரத்தை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாகியுள்ள அபின்ராஜை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.