மனைவி என்றும் பார்க்காமல் தகாத இடங்களில் உதை! தடுக்க முயன்ற வளர்ப்பு நாய்! ஆனால்? பதற வைக்கும் சம்பவம்!

கணவர் தன்னை கொடூரமாக தாக்கியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது ஹைதராபாத் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் மாநகர் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட ஷம்ஷாபாத் பகுதியில் லாவண்யா லஹாரி என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். 2012-ஆம் ஆண்டில் இவர் தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வரும் அதே மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரளூ  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

7 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், சமீபகாலமாக அவர்களுக்கிடையே கடுமையான சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் சென்ற வியாழக்கிழமையன்று லாவண்யா சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அந்த வீடியோவில் "என் கணவர் என்னை கடுமையாக துன்புறுத்தி வருகிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்" என்று பேசியிருந்தார்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் வீடியோ வெளியான சில மணிநேரத்திலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவமானது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

தற்போது லாவண்யாவின் பெற்றோர் வெங்கடேஸ்வரளூ லாவண்யாவை கொடுமையாக தாக்க முயன்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது லாவண்யாவை வெங்கடேஸ்வரளூ கொடுமையாக தாக்க முயற்சிப்பது போன்றும், அதிலிருந்து லாவண்யாவை அவர்கள் வளர்த்து வந்த செல்லப்பிராணி காப்பாற்ற முயன்றது போலும் வீடியோவில் அமைந்துள்ளது. பின்னர் லாவண்யா தன்னுடைய வயிற்றை பிடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்வது போன்று அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

மேலும் லாவண்யா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து இறந்ததாகவும், அந்த கடிதத்தில் "வெங்கடேஸ்வரளூ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினால்தான் என்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமைப்படுத்தி வந்தார்" என்று எழுதி வைத்திருந்ததாக காவல் துறையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.  

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.