ஆசையை நிறைவேற்ற தெரியாத புதுக்கணவன்! ஏமாற்றத்தில் இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!

மனைவியின் ஆசையை கணவன் நிறைவேற்றாததால் விரக்தி அடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அமித். இவருடைய வயது 28. இவருக்கும் அம்மாநிலத்தை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுக்கும் மே மாதம் 13-ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. அஞ்சனாவின் வயது 21 ஆகும். 

இருவரும் நன்றாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராதவாறு அவர்கள் வீட்டில் பூகம்பம் ஒன்று வெடித்தது. சென்ற சனிக்கிழமை அமித் வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு வீட்டில் இருந்தோர் சகல பணிகளையும் செய்து வந்தனர். அஞ்சனா தனக்கு ஒதுக்கப்பட்ட அனைத்தையும் செய்து முடித்து விட்டு உடைகளை தேர்வு செய்வதற்கு சென்றார்.

அவர் தேடிப்பார்த்தபோது அவரிடம் எல்லாம் பழைய புடவைகள் ஆகவே இருந்துள்ளன. தன் கணவர் அமித்திடம் தனக்கு புது புடவை வாங்கித் தருமாறு கூறியுள்ளார். இதனை அமித் உடனே மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கோபம் முற்றிய நிலையில் அமித் அங்கிருந்து வெளியேறினார். மிகுந்த மனமுடைந்த அஞ்சனா, தன் அறையின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வெளியே சென்ற அமித், வீடு திரும்பிய போது தன் மனைவி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அஞ்சனாவின் தந்தை ஆதார் சிங், தன் மகளை வரதட்சணைக்காக கொலை செய்துள்ளனர் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.