காது குத்து நிகழ்ச்சியில் கலவரம்! 1 வயது மகனை தவிக்கவிட்டு இளம் தாய் எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் காரணம்!

குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கும்பகோணத்தில் சுவாமிமலை எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே உத்திரை எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ரேகா. ரேகாவின் வயது 23. இவ்விருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையுள்ளது.

திருமணமான தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதன் பின்னர் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படத்தொடங்கின. இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் மிகுதியாகின. இந்நிலையில் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளன.

ஒரு வயதாகும் மகனுக்கு காது குத்து நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்கு ரேகாவின் பெற்றோர் அரை சவரனில் மோதிரம் போட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சவரன் வேண்டும் என்று கணவன் சண்டை போட்டுள்ளார்.

நேற்று காலையில் வழக்கம்போல தம்பதியினருக்குள் தகராறுகள் மிகுந்தன. ஆவேசமடைந்த கண்ணன் ரேகாவை சகட்டுமேனிக்கு திட்டியுள்ளார். இதனால் ரேகா மிகவும் மனமுடைந்தார். வாழ்க்கையின் மீது பற்றை இழந்த ரேகா தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரேகா தூக்கில் தொங்குவதை கண்ட உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 2 ஆண்டுகளேயானது என்பதால் கும்பக்கோணம் ஆர்.டி.ஓ தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.