கொரோனா சிகிச்சையில் இருந்த என் கணவர் எங்கே..? டாக்டர்கள் கூறிய பதிலால் அதிர்ச்சியில் உறைந்த மனைவி..! பதற வைக்கும் சம்பவம்!

கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த தனது கணவர் எங்கே என்று மனைவி கேட்டதற்கு மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் அந்த பகுதியில் உள்ள காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் வீட்டில் வசித்து வந்த இரண்டு மகள்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து கடந்த 16ஆம் தேதி தாய் மற்றும் இரண்டு மகள்கள் என மூன்று பேரும் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே, அந்தப் பெண்மணியின் கணவர் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியே கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்பு ஏப்ரல் 30ஆம் தேதி அவரும் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். ஆனால் அவர் சிகிச்சை முடிந்து இதுவரை வீடு திரும்பவில்லை.

இதனால் பதறிய அவரது மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது கணவரை காணவில்லை என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரிடம் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகம் அப்பெண்ணின் கணவர் இறந்து விட்டதாகவும் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அவரது உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதாகவும் இதுகுறித்து உரிய தகவல்கள் அவரது குடும்பத்தினரிடையே ஏற்கனவே முறையாக அறிவிக்கப் பட்டு விட்டதாகவும் கூறியுள்ளது.

மேலும் மருத்துவமனை நிர்வாகம் அந்தப் பெண் காரணம் இன்றி குற்றச்சாட்டுகளை வைப்பதாக கூறியுள்ளது. இதை அறிந்த அந்தப் பெண் தனது கணவரின் உடல் தகனம் செய்யப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.