9 வயது மகளுக்கு பெற்ற தந்தையால் நடுரோட்டில் அரங்கேறிய கொடுமை! பதற வைக்கும் சிசிடிவி காட்சி! அதிர வைக்கும் காரணம்!

தனித்து வாழ்ந்து வந்த மனைவியை பார்க்க சென்ற மகளை தந்தை நடுரோட்டில் கொடுமைப்படுத்திய சம்பவமானது மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியிலுள்ள கொடிமரத்த தெருவில் அப்துல் சமது என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் மும்தாஜ். இத்தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அப்துல் சமது மதுப்பழக்கம் உடையவர். தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் அப்துல் சமது இருந்து வந்தார். சில வாரங்களுக்கு முன்னர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் போது அகமது மும்தாஜை சரமாரியாக தாக்கியுள்ளார்.

மும்தாஜ் அகமதிடமிருந்து தப்பித்து அருகிலே உறவினர்களின் வீட்டில் பாதுகாப்பாக தஞ்சமடைந்தார். அப்போது மகள்களை அவருடன் அனுப்பாமல் அகமது தன்னிடமே வைத்துக்கொண்டார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்தவுடன் மூத்த மகள் தன் தாயை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை அறிந்த அகமது நேற்று காலை குடித்துவிட்டு தன் மகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் எவ்வாறு தாயை காண செல்லலாம் என்று கூறி மகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். வலி தாங்காமல் சிறுமி வீதிக்கு ஓடி வந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அஞ்சினர். ஒருகட்டத்தில் சிறுமியை அகமது டியூப்லைட்டால் அடித்துள்ளார். சிறுமியை காப்பாற்ற சென்றபோது அகமது முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் பொதுமக்கள் பயந்தனர். பின்னர் ஒன்று திரண்டு அகமதை அடித்து துரத்தினர். 

அதன் பின்னர் அவர்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள அகமதை தேடி வருகின்றனர். 

இந்த சம்பவமானது திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.