ஒடிசாவில் பிராமணர்களுக்கு எதிராக போராட்டம் ஏன்..?

சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. அரசின் ஒப்புதலோடும் பாதுகாப்போடும் நடத்தப்பட்ட போராட்டம் அது.


அது ஒடிய மக்களால் பிராமணர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம். அந்த வகையில், இந்த போராட்டம், இந்தியாவிலேயே முதன் முதலில் அரங்கேறி இருக்கும் போராட்டமும் கூட. “பிராமணர்களே இந்தியாவை விட்டு வெளியேறு” என்பதுதான் அந்த போராட்டத்தில் எழுப்பப் பட்ட ஒரே கோஷம் ஆகும். என்ன நடக்கிறது ஒடிசாவில் என்பது பற்றி ம.தொல்காப்பியன் பதிவு இது.

இந்த போராட்டம் இரங்கத் தக்கது; அரசியல் சட்டத்துக்கு எதிரானது; மிகத் துயரமான ஒன்று; எண்ணிப் பார்க்கவே அருவெறுக்கத்தக்கது; மனித சமூகத்துக்கு எதிரானது; இழிந்த மானுடச் செயல்; சகித்துக் கொள்ள இயலாதது; மனித பயங்கரவாதம்! ஆனாலும் இந்த போராட்டம் நடந்து விட்டது. இன்றைக்கு இது பேசு பொருளாகி விட்டது. அதே வேளையில் இந்த வகை போராட்டத்துக்கான காரணிகளும் இல்லாமல் இல்லை!

“இந்த சமூகம் குறைபாடுகள் உடையது; இங்கு வாழ வேண்டுமானால் சகிப்புத் தன்மை இருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். ஆனால் குறைகளையும் குற்றங்களையும் உருவாக்கும் ஒரு சமூகத்தில் எனக்கு உடன்பாடு இல்லை” – என்றார் உலகின் மாபெரும் மனித உரிமை கோட்பாட்டாளர், டாக்டர்.அம்பேத்கர்.

சமூகத்தில் குற்றங்களையும் குறைபாடுகளையும் உருவாக்குவதாக, அவற்றை விதைத்து வளர்த்து எடுப்பதாக பிராமணீயம் இருக்கிறது. அதன் அறுவடைப் பயனை எடுத்து ருசித்து வருகிறது பிராமண சமூகம். அதனால்தான் இன்றைக்கு பிராமணர்களுக்கு எதிராக ஒடிசா ஒன்று திரண்டு இருக்கிறது.

மூட நம்பிக்கையை விடாப்பிடியாக பின்பற்றி வரும் பிராமணர்களை போன்ற ஒரு மனிதப் பிரிவினர் உலகத்தில் எங்கேனும் உண்டா? பகுத்தறிவை ஒரு சாதியாக, மதமாக நின்று எதிர்த்து வரும் பிராமணர் போன்ற ஒரு பிரிவினர் உலகில் வேறு எங்கேனும் உண்டா? ஏற்றத் தாழ்வுகளை எழுதி வைத்து அதை ஒரு தர்மமாக போற்றி வரும் பிராமணர்கள் போன்ற ஒரு பிரிவினர் வேறு எங்கேனும் உண்டா? சமத்துவம் இன்மையை சமூக அங்கீகாரம் ஆக்கத் துடிக்கும் பிராமணர்கள் போன்ற ஒரு பிரிவினர் எங்கேனும் உண்டா?

கடவுள் என்னும் மூட நமபிக்கையால் மக்களை முட்டாள்கள் ஆக்கி வருவதில் இத்தனை முனைப்பு காட்டும் பிராமண மூர்க்கவாதிகள் வேறு எங்கேனும் உண்டா? எல்லா வேலை வாய்ப்புகளும் பிராமணர்களுக்கே என்று முழங்கும் பிராமணர்களைப் போன்ற கபடவாதிகள் வேறு எங்கேனும் உண்டா? சமத்துவம் என்பதே இல்லை என்று பிராமணீயம் பேசும் பிராமணர்களைப் போன்ற பிரிவினைவாதிகள் வேறு எங்கேனும் உண்டா? மக்கள் நலன் குறித்து எதுவுமே பேசாமல் அரசாங்கமே முன் வந்து கோயில் கட்டும் அநாகரீக பிராமணீய அரசாங்கத்தை விட வேறு ஒரு அரசாங்கம் இந்த உலகத்தில் வேறு எங்கேனும் உண்டா?

மக்களுக்கு மூட நம்பிக்கையை போதிப்பது; மூடக் கதைகளை கற்பிப்பது; கட்டுக் கதைகளை பரப்புவது; புரட்டு வாதங்களை முன் வைப்பது; பெண்ணுக்கு எதிரான தத்துவங்களை பேசுவது; குழந்தைகளிடம் பேதங்களை வளர்ப்பது; ஆண் பெண் ஏற்றத் தாழ்வுகளை கற்பிப்பது; சாதி பேதங்களை வளர்ப்பது; மதக் கலவரங்களை உருவாக்குவது; மனிதர்களை மேல் கீழாக பார்ப்பது என பிராமணர்கள் குற்றங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த சமூகத்தை குற்றங்களை உருவாக்கும் சமூகமாக மாற்றி விட்டார்கள். எனவேதான், குற்றத்தை உருவாக்கும் சமூகத்தில் உடன்பாடு அற்ற மனித உரிமைக் காவலர்களால் இன்றைக்கு ஒடிசாவில் பிராமணர்களுக்கு எதிரான போராட்டம் உருப் பெற்று இருக்கிறது.

இந்த போராட்டம் நாடு முழுதும் பரவி மிகப் பெரும் அளவில் மனித பயங்கரவாதம் நிகழ்வதற்கு முன்னால் இந்திய அரசு விழித்துக் கொள்ள வேண்டும். பிராமண சமூகத்துக்கும் மற்ற ஒட்டு மொத்த் இந்தியர்களுக்கும் இடையே ஒரு சமூக ஒப்பந்தம் கொண்டு வரப்பட வேண்டும். இரு தரப்பும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட பின்னர் பிராமணர்கள் தங்கள் பிராமண அந்தஸ்தை கைவிட்டு மக்களோடு மக்களாக கலக்க முன் வரவேண்டும்.

1.சட்டம் அனைவருக்கும் சமம்; 2.வாய்ப்புகள் அனைவருக்கும் சமம்; 3.வாழும் உரிமை அனைவருக்கும் சமம்; 4.எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற இந்த நாட்டில் பிறந்த எல்லாருக்கும் சம உரிமை உணடு; 5.பெண் ஆணுக்கு நிகரானவள்; 6.ஆண் பெண்ணுக்கு நிகரானவன்; 7.எதிர்காலத்தை சமமாக பங்கிட்டுக் கொள்ளும் உரிமை ஒவ்வொரு இந்திய குழந்தைக்கும் சமப் பங்கு உண்டு.

8. எவரும் எவருக்கும் உயர்ந்தவரோ,தாழ்ந்தவரோ இல்லை.9. எவரும் எவருக்கும் அடிமையும் இல்லை; ஆண்டானும் இல்லை; 10.கல்வி, வேலை, வணிகம், தொழில், கலை இவை எல்லாம் அனைவருக்கும் பொதுவானது; 11.ஒவ்வொருவருக்கும் மொழிச் சுதந்திரம் பேண உரிமை உண்டு - என்பன போன்ற கோட்பாடுகளை சமூக பொருளாதார வாழ்வில் கடைபிடிக்க இருதரப்பாரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.