என்னோட அக்கா தான் போய்ட்டா..! அவளுக்காக இதாவது செய்யுங்க..! பெண் டாக்டரின் தங்கை கதறல்!

பாலியல் வன்புணர்வு வழக்குகளில் சட்டத்திருத்தங்களை கொண்டுவருமாறு பிரியங்காவின் சகோதரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

நேற்று முன்தினம் 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு நாடு முழுவதிலும் வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை அளிப்பது தொடர்பாக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று பிரியங்கா ரெட்டியின் சகோதரி கூறியிருப்பது வைரலாகி வருகிறது. 

"பாலியல் வன்புணர்வு வழக்குகளில் கைதாவோருக்கு பிணை மறுக்கப்பட வேண்டும். மேலும் இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் மிக விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். குற்ற செயல்கள் கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த கற்பழிப்பு வழக்கில் பிணை வழங்கப்பட்ட குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக்கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கு எதிராக பிரியங்கா ரெட்டியின் சகோதரி குரல் கொடுத்ததாக கூறப்படுகிறது.