வெளியே செல்லும் போது கால் இடறினால் உள்ளே வந்து நீர் அருந்திச் செல்லவது இதற்கு தான்!

நம்மில் பலருக்கும் சகுனம் பார்க்கும் பழக்கம் இருக்கிறது.


சகுனம் என்பது நடைபெறவுள்ள நிகழ்விற்கான அறிகுறி என்று சொல்லலாம். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கை கால் இடறினாலோ, வாயிற்படியில் தலையில் இடித்துக் கொண்டாலோ அதனை சகுனத் தடையாகச் சொல்வார்கள். இது போன்ற சகுனங்களை மூட நம்பிக்கை என்று ஒதுக்க முடியாது. உண்மை நிலையை யோசித்துப் பாருங்கள். வெளியே ஒரு வேலையாக செல்லும் போது கால் இடறுவது, தலையில் இடித்துக் கொள்வது போன்றவை வெளியே செல்பவரது கவனக்குறைவால் தான் ஏற்ப்படுகிறது.


அதே கவனக்குறைவுடன் சென்றால் அவரால் அந்த வேலையை சரிவர செய்ய இயலாது. கவனக்குறைவினை சரி செய்வதற்காகவும், மனதளவில் அவர் தெளிவாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் வீட்டிற்குள் திரும்ப அழைத்து அமர செய்து நீரை அருந்துங்கள் என்கிறார்கள். குடிக்கின்ற நீர் மனதை சாந்தப்படுத்தும்.   தண்ணீர் பருகிவிட்டு செல்லும் பொழுது தன் உடம்பில் உள்ள குறைகள் காணாமல் போகின்றன.  இதனால் வெளியில் சென்று செய்து முடிக்க வேண்டிய பணிகள் தடையேதுமின்றி நடக்கும்.

தடைகள் உண்டாகும் போது தான் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்திச் செல்லவேண்டும் என்பதில்லை. வெளியில் வேலையாகக் கிளம்பும் போதே மனைவியின் கையாலோ, தாயாரின் கையாலோ, அல்லது அந்த வீட்டில் உள்ள சுமங்கலிப் பெண்ணின் கையாலோ ஒரு சொம்பு தண்ணீரை வாங்கிக் குடித்து விட்டு செல்லலாம். அவ்வாறு செய்வதினால் இது போன்ற சகுனத்தடை உண்டாகாது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.