மார்கெட் போன நடிகைகளை வைத்து செம பிஸ்னஸ்..! வசமாக சிக்கிய பிரபல கம்பெனி!

தமிழ் மற்றும் தெலுங்கில் மார்க்கெட் இழந்த நடிகைகளை வைத்து கொலர்ஸ் நிறுவனம் செய்து வந்த பிஸ்னஸ் மூலமாக வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகியுள்ளது.


தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக திகழ்ந்து வருவது கொலர்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம். உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை வழங்குவதாக இந்த நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது.

120 கிலோ எடையுடன் இருப்பவர்களை தங்களிடம் சிகிச்சைக்கு வரவழைத்து 60 கிலோவாக மாற்றிவிட்டதாக இந்த நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது. அதோடு மட்டும் அல்லாமல் நடிகைகள் மந்த்ரா, சிம்ரன், ரம்பா, பிரியாமணி, நிரோஷா, கவுசல்யா என பலரும் இந்த நிறுவனத்தின் மாடல்களாக இருந்துள்ளனர்.

அதாவது மார்கெட் இழந்து வீட்டில் இருந்த போது எடை கூறி குண்டாகிவிட்டதாகவும் பிறகு கொலர்ஸ் ஹெல்த்கேர் சென்று உடல் எடையை கணிசமாக குறைத்து மறுபடியும் சினிமாவில் ரவுண்ட் வருவதாகவும் கூறி அந்த நடிகைகள் விளம்பரம் செய்து வந்தனர்.

நடிகைகள் விளம்பரத்தால் மேலும் பிரபலம் அடைந்த கொலர்ஸ் நிறுவனத்திற்கு தற்போது 50 இடங்களில் கிளைகள் உள்ளதாக சொல்கிறார்கள். இந்த அளவிற்கு கொலர்ஸ் தன்னுடைய தொழில் சாம்ராஜ்யத்தை வளர்த்தெடுக்க காரணம் மார்க்கெட் போன நடிகைகள் தானாம்.