ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது..? உதயநிதி விவகாரத்தை போட்டுத் தாக்கிய அமித் ஷா.

ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரே கவலை, உதயநிதி குறித்து மட்டும்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.


அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் 10 ஆண்டுகளாக சாமானியர்களின் ஆட்சி நடக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே ஆட்சியமைக்க நினைக்கின்றனர். மீனவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் பற்றி பிரதமர் கவலை. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, அவரது மகனை பற்றி கவலை தான் கவலைப்படுகிறார்.

ஸ்டாலின் குறிப்பிடும்படியாக பேசுவது இல்லை. எதையும் பார்த்து தான் படிக்கிறார். உதயநிதியை பற்றி நான் பேசும்போது எல்லாம் ஸ்டாலினுக்கு கோபம் அதிகரிக்கிறது. சமீபத்தில் அவர் கட்டுப்பாட்டை இழந்து, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து விமர்சனம் செய்தார்.

இறந்தவர்களை பற்றி விமர்சனம் செய்வது தமிழர்களின் மரபு அல்ல. ஆனால், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்கின்றனர். காமராஜரை இழிவுபடுத்தியவர்கள் திமுக.,வினர். தற்போது, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லியை விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

முதல்வரையும், அவரது தாயாரையும் அவமரியாதை செய்த திமுகவை ஒதுக்கி வைக்க வேண்டும். திமுக , காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை ரத்து செய்வார்கள். மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக. குடும்பத்திற்காக உழைக்கும் கட்சி தி.மு.க., மக்களை பற்றி கவலைப்படுபவர் வேண்டுமா அல்லது மகனை பற்றி கவலைப்பட வேண்டுமா என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்’ என்று பேசியிருக்கிறார்.

மக்கள் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்கள்.