நாங்க ரெண்டு பேர் இருக்கோம்.! உனக்கு 3வதா இன்னொருத்தன் கூட உறவா? 33 வயது திருமங்கை கொலையில் திடுக் தகவல்!

கள்ளக்காதலி வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்ததால் கள்ளக்காதலர் அவரை கொலை செய்து புதைத்த சம்பவமானது நாமக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் திருமதூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவியின் பெயர் திருமங்கை. திருமங்கையின் வயது 33. எதிர்பாராவிதமாக திருமங்கை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் கவுண்டப்புதூர் கிராமத்து அமராவதி ஆற்றங்கரையில் கொல்லப்பட்டு பிணமாக வீசப்பட்டிருந்தார்.

உடனடியாக பொதுமக்கள் அப்பகுதியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் திருமங்கையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய மார்பில் ஆடம்ஸ் என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. உடனடியாக ரமேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு ரமேஷ் விரைந்து வந்தார். அப்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமங்கை அவருடைய சித்தி மற்றும் சித்தி மகளுடன் கோவிலுக்கு சென்றிருந்ததாகவும், அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளதாகும் கூறப்படுகிறது.

காவல்துறையினர் திருமங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமங்கை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அவருடைய செல்போன் அழைப்புகளை மூலம் சேலம் மாவட்டத்து அம்மாபேட்டையிலுள்ள செங்குந்தர் தெருவை சேர்ந்த தனபால் என்பவரே திருமங்கையை கொலை செய்ததாக காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். "நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே நான் ஜே.சி.பி இயந்திரம் ஓட்டி வந்தேன். அப்போது திருமங்கை பேருந்து நிலையத்திற்கு அருகே டிபன் கடை வைத்து நடத்தி வந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது.

எனது அறைக்கு திருமங்கை வழக்கமாக வருவார். நாங்கள் இருவரும் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளோம். வயதை காரணம் காட்டி திருமங்கை பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் ரமேஷை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் எங்களுடைய நெருக்கம் பாழாகாமல் இருந்தது. சமீபத்தில் திருமங்கை ஒருவரிடம் செல்போனில் பேசியது எனக்கு தெரியவந்தது. இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன்.

ஆத்திரத்தை வெளியே காட்டி கொள்ளாமல், அவரை என்னுடைய அறைக்கு அழைத்தேன். திருமங்கையும் இருசக்கர வாகனத்தில் என்னுடைய அறைக்கு வந்தார். உல்லாசமாக இருந்த பின்னர் அந்த நபர் குறித்து நான் விசாரித்தேன். இதனால் எங்கள் இருவருக்குள்ளும் தகராறுகள் ஏற்பட்டன. அப்போது ஆத்திரத்தில் திருமங்கையின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அதன்பின்னர் என்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று ஆம்னி வேனை எடுத்துக்கொண்டு திருமங்கையின் உடலை அமராவதி ஆற்றங்கரையில் வீசினேன்" என்று கூறியுள்ளார்.

வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் தனபாலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.