சந்திராயன் 2 விண்ணில் பறக்காதது ஏன்? கடைசி நேரத்தில் நிகழ்ந்தது என்ன?

திட்டமிட்டபடி சந்திராயன் 2 விண்ணில் பாயாததற்கான காரணம்ஓரளவிற்கு தெரியவந்துள்ளது.


இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. விண்ணில் ஏவப்பட்ட பிறகு சுமார் 52 நாட்கள் பயணம் செய்து சந்திராயன் 2 கலம் நிலவை அடையும் என்று கணிக்கப்பட்டது.

மேலும் நிலவின் தென்பகுதியில் சந்திராயன் 2 ஆய்வூர்தியை இறக்கி நிலவின் மண் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான கவுண்டவுன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. மழை பெய்தால் கூட சந்திராயன் 2 ஏவுதல் தடை படாது என்று அறிவிக்கப்பட்டது.

சந்திராயன் 2 ஏவுவதை பார்க்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூட ஸ்ரீஹரிகோட்டா வந்துவிட்டார். ஆனால் ஏவப்படும் நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சந்திராயன் 2ன் T 56 எனும் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்தே சந்திராயன் 2 திட்டத்தை தற்காலிகமாக இஸ்ரோ நிறுத்தி வைத்தது. T 56 பகுதியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவே இஸ்ரோவின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள். இது பெரிய விஷயம்இல்லை என்றாலும் கூட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் இஸ்ரோ ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

இதனால் தான் இஸ்ரோ சந்திராயன் 2 ஏவுதலை கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்தது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் ஆய்வூர்திகளை இறக்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரோ நிலவுக்கு ஆய்வூர்தியை அனுப்பியது.

பெரசீட் எனும் இந்த திட்டத்தின் போது ஆய்வூர்தி நிலவில் தரையிறங்கிய போது வெடித்துச் சிதறியது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதமே இந்தியா சந்திராயன் 2வை விண்ணில் ஏவுவதை ஒத்தி வைத்தது.