கோயிலில் தீப ஆராதனையில் ஆலயமணி ஒலிப்பதேன்?

கோயிலில் கடவுளுக்கு ஆராதனை எழுப்பும்போது கெட்டுமேள ஒலி அல்லது ஆலய மணி ஒலிக்கச் செய்வது வழக்கம். இவை இல்லாத இடத்தில் கையில் மணியை ஆட்டிக்கொண்டே அபிஷேகம் செய்வார்கள். இது ஏன் தெரியுமா?


கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் ஒருநிலைப்பட்டு இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்பொதுவாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்

பலர் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவார்கள்இன்னும் சிலர் வாய்விட்டு தங்கள் வேண்டுதலை கேட்பார்கள்இது மற்ற பக்தர்களின் காதில் விழக்கூடாது என்பதற்காகத்தான் மணியோசை எழுப்பப்படுகிறது.

இந்த மணியோசை கேட்டு துர்தேவதைகள்ராட்சசர்கள் எல்லாம் ஓடிவிடுவர் என்பதும் ஐதீகம்பூஜாமணி தீபாராதனையின் போது எல்லோருடைய மனதையும் ஒரு மிக்கச் செய்கிறதுமணி ஓசையில் ஓம் என்ற பிரணவ மந்திரமும் கலந்து ஒலிப்பதாக சொல்வதுண்டு.