ஜோதிகாவுடன் நெருக்கம்..! விக்ரமை திருமணத்திற்கு அழைக்காத சூர்யா! 2006ம் ஆண்டு நடந்தது என்ன?

2006ம் ஆண்டு நடைபெற்ற சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு அப்போது முன்னணி நடிகராக வலம் வந்த விக்ரமை அழைக்காதது பெரும் சர்ச்சையாகியிருந்தது.


2006ம் ஆண்டு நடைபெற்ற சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு அப்போதைய முதலமைச்சர் கலைஞர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் என நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டது. ஆனால் அப்போது தில், தூள், ஜெமினி, சாமி என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக இருந்த விக்ரம் கலந்து கொள்ளவில்லை.

இதற்கு சூர்யா - ஜோதிகா தரப்பில் இருந்து விக்ரமுக்கு அழைப்பு அனுப்பப்படாதது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் நடிகர் விக்ரம் நடிகை ஜோதிகாவின் மிகத் தீவிரமான ரசிகர். இதனை பலமுறை விக்ரம் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த நிலையில் ஜோதிகாவுடன் ஜோடியாக விக்ரம் நடித்த தூள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதன் பிறகு விக்ரம் நடித்த சாமி படத்திலும் ஜோதிகாவை ஹீரோயின் ஆக்க விக்ரம் முயற்சி செய்ததாகவும் ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் அவரே கூறியிருந்தார். ஆனால் சாமிக்கு பிறகு விக்ரம் நடித்த அருள் திரைப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படத்தில் பல நெருக்கமான காட்சிகள் இருந்தன.

இதே போல் பாடல் காட்சிகளிலும் விக்ரம் - ஜோதிகா ஜோடி ரொமான்ஸ் அதிகமாக இருக்கும். அதே சமயம் விக்ரம் - ஜோதிகா நல்ல நண்பர்கள் என்கிற தகவலும் அவ்வப்போது வெளியாகி வந்தது. இதற்கிடையே படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் -, ஜோதிகா அதிக நேரம் அரட்டை அடிப்பதாகவும் இதனால் சூர்யா படப்பிடிப்பு தளத்திற்கே நேரில் சென்று சண்டையிட்டதாகவும் கூட தகவல் வெளியானது.

அதிலும் அருள் படப்பிடிப்பு நடைபெற்ற காரைக்குடிக்கு நடிகர் சூர்யா திடீரென சென்று ஜோதிகாவை சந்தித்து பேசியது அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது. அருள் படத்திற்கு பிறகு ஜோதிகாவுடன் விக்ரம் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் தான் 2006ல் சூர்யா - ஜோதிகா திருமணம் நடைபெற்றது.

இதில் விக்ரமுக்கு அழைப்பு கொடுக்காததால் அவர் பங்கேற்கவில்லை. இது குறித்து ஒரு பேட்டியில் சூர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு வேண்டும் என்றே விக்ரமுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கவில்லை என்று சூர்யா தெரிவித்துள்ளார். அப்போது மிகப்பெரிய நடிகராக வந்த விஜயகாந்திற்கு கூட அழைப்பிதழ் கொடுக்க தாங்கள் மறந்துதுவிட்டதாகவும் சூர்யா கூறியிருந்தார்.

அதே சமயம் தங்கள் வீட்டில் பிறகு நடந்த சுப நிகழ்ச்சிகளுக்கு விக்ரமுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் தான் பங்கேற்கவில்லை என்றும் சூர்யா கூறியிருந்ததார்.