முக ஸ்டாலினை சுடலை என கிண்டல் செய்து கூப்பிடுவது ஏன் தெரியுமா?

ஸ்டாலின்


வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசவில்லை, நான் கலைஞரின் மகன் என்று பவுமான வசனத்தை பல்வேறு இடங்களில் பேசி செம ஹிட்டாகிய ஸ்டாலினை எதற்காக சுடலை என்று பல்வேறு எதிர்க் கட்சிகள் கிண்டல் செய்கிறது என்று தெரியாமல் புதிய வாக்காளர்கள் திண்டாடுகிறார்கள்.

ஊருக்கெல்லாம் உபதேசம் செய்வதுதான் தி.மு.க.வின் பழக்கம். அப்படித்தான் தமிழில் பெயர் வைக்கவேண்டும், தமிழில்தான் படிக்கவேண்டும் என்றெல்லாம் ஸ்டாலின் திடீரென பேசத் தொடங்கியபோது, அவருக்கு உருவான பெயர்தான் சுடலை.

அதாவது ஸ்டாலின் என்ற பெயரின் முதல் எழுத்தான ஸ் என்பதைத்தான் தமிழில் சு என்று மொழிபெயர்த்து, ஸ்டாலின் என்பதை சுடலை என்று நல்ல தமிழ்ப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஆக, பொதுமகா ஜனங்களே இனியும் சுடலை என்றால் ஏதோ கெட்ட வார்த்தை என்று நினைக்க வேண்டாம், சுடலைன்னா நம்ம ஸ்டாலின்.