குறைமாதக் குழந்தைகள் ஏன் ??

கர்ப்பகாலம் முழுமையாக முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக அதாவது 260 நாட்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள், குறைமாதக் குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன. குறை மாதத்தில் பிரசவம் நிகழ்வதற்கான சில முக்கிய காரணங்களை தெரிந்துகொள்வோம்.


·         கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர்ரத்த அழுத்தம் அல்லது கர்ப்பகால நீரிழிவு முக்கிய காரணமாக இருக்கலாம். பனிக்குடம் உடைந்து கர்ப்பவாய் திறந்துகொள்வதும் குறைமாத குழந்தை பிறப்புக்கு காரணமாகலாம்.

·         தாய்க்கு நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுவது குறைமாதக் குழந்தை பிறப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

·         முதல் பிரசவத்தில் தாய்க்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டதன் காரணமாகவும் இரண்டாவது பிரசவம் குறை பிரசவமாக மாறலாம்.

·         விபத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவையும் சில நேரங்களில் குறை பிரசவத்திற்கு காரணமாக அமைகின்றன.

எவ்வித காரணங்கள் இல்லாமலும் அல்லது காரணம் அறியமுடியாமலும் சிலருக்கு குறை பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் முறையான பராமரிப்பும், தொடர் பரிசோதனையும் கர்ப்பிணிக்கு கடைசி நிமிடம் வரையிலும் அவசியமாகும்.