யாருமே எதிர்பாராத வகையில் அ.ம.மு.க. அமைப்பில் இருந்து சசிகலாவை தூக்கியெறிந்துவிட்டு, அந்த இடத்தில் தான் அமர்ந்துகொண்டு, கட்சியாக பதிவு செய்ய இருக்கிறார் தினகரன்.
தினகரன் கட்சிக்குள் கசமுசா! சசிகலாவுக்கு ஆதரவாக கட்சியை உடைக்கப்போவது யார்? பரபரப்பு தகவல்!

வெளிப்பார்வைக்கு இது சரியான அரசியல் நடவடிக்கையாகத் தெரிந்தாலும், இது சசிகலாவுக்கு செய்த மிகப்பெரும் துரோகம் என்று அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள். தினகரன் கட்சியில் இருப்பவர்கள் அனைவருமே சசிகலாவின் ஆதரவாளர்கள்.
இப்படி இருக்கும்போது, யாரிடமும் ஆலோசனை மேற்கொள்ளாமல் சசிகலாவை வெளியே தூக்கிப்போடுவது என்ன நியாயம். தேவையென்றால் சசிகலாவை இப்போதே தலைவர் என்று அறிவித்துவிடாலாமே, அதற்கும் ஏன் சுணக்கம் என்று கேள்வி கேட்கிறார்கள்.
சசிகலாவுக்கு இப்போது அ.தி.மு.க.வும் இல்லை, அ.ம.மு.க.வும் இல்லை என்று ஆகிவிட்டது. அதாவது சசிகலா அரசியல் அனாதையாகிவிட்டார். சசிகலாவின் தயவால் சட்டென தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துவிட்டார் தினகரன்.
இந்த நிலையில் பெங்களூரு புகழேந்தி, தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட சிலர் தினகரன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தினகரனுக்கு எதிராக இருக்கும் ஆட்களை ஒன்றுசேர்க்கும் முயற்சி நடக்கிறதாம். அனைவரும் ஒன்று சேர்ந்தவுடன் கட்சியை உடைக்கும் படலம் ஆரம்பமாகுமாம். அது அனேகமாக சின்னம்மா மக்கள் முன்னேற்றக் கழகமாக இருக்கலாம்.