விநாயகருக்கு ஏன் வெள்ளெருக்கம்பூ பிடிக்கிறது என்று தெரியுமா ??

உலகில் எவ்வளவோ லட்சக்கணக்கான பூ வகைகள் இருக்கையில் ஏன் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு பிடித்த பூவாக வெள்ளெருக்கம்பூ கூறப்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் என்ன என்று இப்போது பார்ப்போம்.


இந்த எருக்கம் பூவிற்கு தெய்வீக மூலிகை எனும் மற்றொரு பெயரும் உண்டு. இந்த பூவானது சித்த மருத்துவத்தில் மிகவும் பெரிய பங்கு வகிக்கிறது. இந்தப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பலவகையான நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறாக பலவகையான மருத்துவ குணங்களை பெற்ற இந்த எருக்கம் பூவானது விநாயகருக்கு அர்ச்சனை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

விநாயகருக்கு எருக்கம் பூவை சாற்றுவது போலவே சூரிய பகவானுக்கும் எருக்கம் பூவை சாற்றும் வழக்கம் நமது பண்பாட்டில் உள்ளது. சூரிய பகவானின் கோயில்களில் தல விருட்சமும் எருக்கம் செடி தான் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகவே எருக்கம் மாலையை விநாயகருக்கு அணிவித்தால் விநாயகரின் அணுகூலம் மட்டுமில்லாமல் சூரிய பகவானின் அனுகூலமும் நமக்கு கிட்டும் என்பது ஐதீகம். பொதுவாக ஒன்பது வகைகளில் உள்ள இந்த எருக்கம் பூக்கள் கொண்டு சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறாக எருக்கம் பூவை சாற்றி விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கி நாம் நினைத்த செயலில் வெற்றி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.