MRPயை விட ரூ.15 கூடுதல் விலை! தட்டிக் கேட்ட வாடிக்கையாளருக்கு சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட விபரீதம்! அதிர்ச்சி வீடியோ!

சென்னை சரவணா ஸ்டோர்ஸில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்பட்டதை இளைஞர் ஒருவர் தட்டிக்கேட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னையின் புறநகரான பாடியில் சரவணா ஸ்டோர்ஸ் இயங்கிவருகிறது. இங்கு வில்லிவாக்கத்தில் சேர்ந்த உமர் பரூக் என்பவர் 8-ஆம் தேதியன்று மளிகை பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளார். பொருட்கள் அனைத்தையும் வாங்கி விட்டு பில் போடுவதற்காக சென்றார். அவர் ஒரு "ஹைட் அண்ட் சீக்" பிஸ்கட்டின் பெரிய பாக்கெட்டை வாங்கியிருக்கிறார். அந்த பாக்கெட்டில் ஒரிஜினல் விலையானது 95 ரூபாய். ஆனால் அந்த பாக்கெட் மீது சரவணா ஸ்டோர்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 80 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரும் அந்த பிஸ்கட் பாக்கெட் 80 ரூபாய் என்றே நினைத்திருந்தார். ஆனால் போட்டவுடன் அது 95 ரூபாய் என்று காட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமர் பரூக் பில் போட்ட பெண்ணிடம் இதுகுறித்து கேட்டார். அவரோ மற்றொருவருடன் கேட்குமாறு கையை காட்டினார்.

15 ரூபாய் வித்யாசத்தினால் அங்கு பேரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்தவுடன் கடையின் பாதுகாவலர்கள் உமர் பரூக்கை அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அவர் வரவில்லை. உடனடியாக அவரை தரதரவென இழுத்து சென்றனர். 

தீபாவளி நேரம் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது.  அப்போது அங்கிருந்த பிற பொதுமக்கள் உமர் பரூக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். பவுன்சர்கள் அவரை ஆஃபீஸ் ரூமுக்கு அழைத்து செல்வதாக கூறிய போது, பொதுமக்கள் அதை கண்டித்து இங்கேயே பேசி தீர்க்குமாறு கூறியுள்ளனர்.

நிறைய பேர் இதில் ஈடுபட்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. உமர் பரூக்கை அங்கேயே விட்டு சென்றனர்.

தனக்கு ஏற்பட்ட அவமானத்தை புகாராக எழுதி காவல்துறையினரிடம் உமர் பரூக் சமர்ப்பித்துள்ளார். வழக்கமாக சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரிய கடைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் அங்கேயே பேசி தீர்த்துக்கொள்ள முடிவெடுப்பர். அப்படியும் இயலவில்லையெனில், காவல் நிலையத்திலேயே பேசிய தீர்த்துக்கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

இந்த புகாரில் எவ்வாறு நடக்கப்போகிறது என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.