முதல் மனைவி இருந்த போது..! 2வது திருமணத்திற்கு பிறகு ஃபீல் பண்ணும் மதுரை முத்து!

மதுரை முத்து அழுது கொண்டு தன்னுடைய முதல் மனைவியின் நினைவுகளை கூறிய சம்பவம் அனைவரையும் மனமுருக வைத்துள்ளது.


தொலைக்காட்சிகளில் வந்த பிரபலமான காமெடியர்களுள் மதுரை முத்து மிகவும் முக்கியமானவர். சன் டிவியில் முதன் முதலில் நடந்த நகைச்சுவை தொடரில் மதுரை முத்து கலந்து கொண்டு தன்னுடைய திறனை வெளிப்படுத்தினார். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டார். தற்போது 2-வது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய முதல் மனைவி தன் வாழ்வில் செய்த உதவிகளை நினைவு படுத்தியுள்ளார்.

"நான் முதன் முதலில் அவரை 10 நிமிடங்கள் பார்த்தேன். உடனடியாக அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற என் ஆசையை தெரிவித்தேன். அவருடைய குடும்பத்தில் ஏற்கனவே நிறைய சிரமங்கள் இருப்பதாக கூறினார். மேலும் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருடைய கணவர் வேறு ஒருவருடன் சென்றுவிட்டார் என்றும் கூறினார்.

என்னுடைய வாழ்வில் பல விஷயங்களை மாற்றியது அவர் தான். சம்மதம் தெரிவித்தவுடன் 2 மாதங்களிலேயே அவரை திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய வாழ்வில் அவர் இருந்தபோது மிகவும் சிரமத்தில் இருந்தேன். தற்போது கார், வீடு ஆகியவற்றை சொந்தமாக வைத்துள்ளேன். ஆனால் அவர் என்னுடன் தற்போது இல்லை. அவர் மிகவும் பக்தி கொண்டவர். சதுரகிரி மலைக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது ஏறி நடந்தார்.

மதுரை மாவட்டத்திலேயே நான் தான் பெரிய வீடு கட்ட வேண்டும் என்று என் மனைவி ஆசைப்பட்டார். எனக்கு மிகப்பெரிய விபத்து நேர்ந்தது. உடலில் 12 தையல்களை போட்டு இருந்தேன். அப்போது என் மனைவி பழனி முருகனிடம் வேண்டி மொட்டை அடித்தார். அவருடைய முடி அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் என்னை காப்பாற்றுவதை பற்றி மட்டுமே யோசிப்பார்.

என் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்த அவருடைய கடைசி தருணங்களில் என்னால் உடனிருக்க இயலவில்லை. நான் அமெரிக்காவில் இருந்தபோது என் மனைவி திடீரென்று இறந்துவிட்டார். விசா பிரச்சனையினால் என்னால் அவருடைய இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள இயலவில்லை" என்று கண்கலங்கி கூறினார்.

2016-ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத்தில் மதுரை முத்துவின் முதல் மனைவி இறந்து விட்டார். சில மாதங்கள் கழித்து அவர் 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.