ஜெயலலிதா இருக்கும் போதே தான் திமுகவினருடன் தொடர்பில் இருந்ததாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த கலைராஜன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா இருந்த போதே திமுகவுடன் தொடர்பில் இருந்தேன்! அதிமுக மா.செ வெளியிட்ட திடுக் தகவல்!

தி.நகர் மேற்கு பகுதி திமுக சார்பில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ ஜெ அன்பழகன், காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமீபத்தில் அமமுக.,வில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ள .கலைராஜன் பங்கேற்று பேசினார். அப்போது
ஆளும் கட்சியாக அதிமுக இருந்த காலத்திலேயே திமுகவோடு நான் தொடர்பு வைத்திருப்பதாக சொல்வார்கள், அது உண்மைதான். திமுகவை பார்த்தால் குற்றம், பேசினால் குற்றம் என்ற காலத்திலேயே நான் திமுகவினரோடு பேசுவேன்.
ஜெயலலிதா பார்த்தால் நடவடிக்கை எடுப்பார் என்றெல்லாம் நான் பேசாமல் இருந்தது கிடையாது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பார்த்து கையசைத்து வணக்கம் வைப்பேன் , அவரும் பதிலுக்கு வணக்கம் சொல்வார்.
அதேபோல கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை பார்த்தும் கையசைத்து பேசி இருக்கிறேன். அப்போதிருந்தே திமுகவினரோடு நல்ல நட்பு இருந்தது. அந்த நட்பு இப்போது அவர்களுடன் ஐக்கியமாகும் அளவிற்கு வந்திருக்கிறது.இதைச் சொல்வதில் எனக்கு எந்த ஒளிவு, மறைவும் இல்லை.
இவ்வாறு கலைராஜன் பேசியுள்ளார்.