நடுவானில் திடீரென கழன்று விழுந்த டயர்..! நடு நடுங்கிய 49 பயணிகள்..! ஹீரோவான விமானியின் திக்திக் நிமிடங்கள்!

விமானத்திலிருந்து சக்கரங்கள் கழன்று விழுந்த சம்பவமானது கனடா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கனடா நாட்டில் மான்ட்ரீல் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அமைந்துள்ள மாண்ட்ரீல் ட்ரூடோ விமான நிலையத்திலிருந்து 49 பயணிகள் மற்றும் 3 விமான அதிகாரிகள் கொண்ட ஏர் கனடா  விமானமானது சில நாட்களுக்கு முன்னர் சாகுவேன் நகரத்திற்கு  புறப்பட்டுள்ளது. 

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் சக்கரங்கள் கழன்று விழுந்துள்ளன. இதனால் விமானி பெரும் பதற்றமடைந்தார். இருப்பினும் நிலைமையை சாதுரியமாக கையாண்டு விமானத்தை விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். 

இதுகுறித்து அந்த விமானம் அதிகாரிகள் கூறுகையில், "எங்களுடைய விமான ஓட்டுநர்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை கையாளுவதற்கு பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களால் எளிதில் இதுபோன்ற சூழ்நிலையிலிருந்து பயணிகளை காப்பாற்ற இயலும். விமானத்தில் ஏற்பட்ட பழுது குறித்து மான்ட்ரீல் ஊழியர்கள் ஆய்வு மேற்கொள்வர்" என்றும் கூறினார்.

இந்த சம்பவமானது கனடா நாட்டின் ஊடகங்களில் வைரலாகி வருகிறது.