ஐரோப்பியர்கள் கொண்டுவந்த பீட்ரூட்டில் என்ன சத்து இருக்குது?

கரும்புக்கு அடுத்தபடியாக இனிப்புக்காக பயன்படுத்தும் சர்க்கரையின் மூலப்பொருளாக பீட்ரூட் இருக்கிறது. பீட் செடியின் வேர்ப்பகுதியை உணவுக்காக பயன்படுத்த ஆரம்பித்தவர்கள் ரோமானியர்கள்.


இந்தியாவில் பீட்ரூட் அறிமுகம் செய்தது ஐரோப்பியர்களே. இது குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியது. பீட்ரூட் தோலை லேசாக கிள்ளியதும், உள்ளே சிவப்பு சதை பகுதி தெரியவேண்டும். தோல் கடினமாக இருந்தால் சுவை குறைவாக இருக்கும்.

·         பீட்ரூட்டில் சர்க்கரை, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம் போன்றவை நிரம்பியுள்ளன.

·         பீட்ரூட் இலையில் வைட்டமின் அதிக அளவில் இருப்பதால் கீரை போன்று உட்கொள்வது நல்லது.

·         பீட்ரூட்டில் இருக்கும் இரும்புச்சத்து காரணமாக ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

·         தீ பட்ட இடத்தின் மீது முதல் உதவியாக பீட்ரூட் சாறு பயன்படுத்தலாம்.

நீண்ட காலமாக மலச்சிக்கல், மூலக் கோளாறுகளால் அவதிப்படுபவர்களுக்கும் பீட்ரூட் விரைந்து நிவாரணம் தருகிறது.