பாதச்சனி என்ன செய்யும் தெரியுமா? பரிகாரம் இருங்குங்கோ!

பாதச் சனி என்பது ராசிக்கு இரண்டில் சனிதேவர் சஞ்சாரம் செய்வதாகும். இந்நிலையில் உள்ள சனிதேவரை குடும்ப சனி அல்லது பாதச் சனி என்று அழைப்பார்கள்.


பாதச் சனி, விரயச் சனி மற்றும் ஜென்ம சனி அளவிற்கு பாதகங்களை ஏற்படுத்தாது. பாதச் சனி நடைபெறும்போது வடுக்கள் மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கான சூழல் அமையும்.

பாதச் சனியால் உண்டாகும் பலன்கள் : கல்வியிலும், பதவிகளிலும் எந்தவித முன்னேற்றம் இன்றி மந்த நிலையாகவே இருக்கும். வீடு கட்டுபவர்களுக்கு சரியான வேலையாட்கள் அமையாமல் வீட்டு வேலை பாதியில் நிற்கும் நிலை ஏற்படலாம். கால்நடைகள் மற்றும் வாகனங்களால் லாபம் இல்லாமல் போகலாம். தேவையில்லாத செயல்களால் பொருள் இழப்பு ஏற்பட்டு பண நெருக்கடி போன்ற சூழல் அமையலாம்.

வாக்கு ஸ்தானத்தில் சனிதேவர் இருப்பதால் தன் பேச்சாலேயே பிரச்சனைகளை தேடிக் கொள்வார்கள். பயன் இல்லாத பல அலைச்சல்களை ஏற்படுத்துவார். பாதச் சனி நடைபெறும் காலங்களில் காலில் அடி, சுளுக்கு, புண், வாதம் போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

ஒரு சிலருக்கு வாழ்க்கையில் ஊக்கமோ, உற்சாகமோ இல்லாமல் வாழ்க்கையில் இதுவரை விரும்பி வந்த அனைத்தையும் வெறுத்து தத்துவங்கள் பேசும் விரக்தி நிலைக்கு கொண்டு செல்வார். சென்ற ஜென்மங்களில் செய்த கர்மவினைக்கு ஏற்ப இந்த நிலையில் உள்ள சனிபகவான் செயல்படுவார்.

பாத சனி காலத்தில் பாதகமான பலன்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சனிக்கிழமை தோறும் கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதிக்கு சென்று சனி பகவானுக்கு நெய் தீபங்கள் ஏற்றி, எள் சாதம் செய்து நைவேத்தியமாக வைத்து வழிபட்டு வரவேண்டும்.

வழிபாடு முடிந்த பிறகு அந்த எள் சாதத்தை யாசகர்களுக்கு உண்ணக்கொடுத்து, சிறிது பணத்தையும் சேர்த்து தானமாக கொடுப்பது பாத சனி தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும். தினந்தோறும் காலையில் காகங்கள் மற்றும் இதர பறவைகளுக்கு உணவளித்து பின்பு நீங்கள் சாப்பிட வேண்டும்.

வீட்டில் நவகிரக் ஹோமம் செய்தால் சனி கிரகத்தின் பாதகமான நிலையால் ஏற்படக்கூடிய கடுமையான பலன்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். சனிக்கிழமைகளில் ஆஞ்சேநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபட்ட பின்பு “ஹனுமன் சாலிசா” படித்து வந்தாலும் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். சனிக்கிழமைகளில் அடர் நீல நிற ஆடைகள் அணிந்து வந்தால் சனி பகவானின் பரிபூரன ஆசிகள் கிடைக்கும்.