நட்புன்னா என்னன்னு தெரியுமா? பிரெண்ட்ஷிப் டே ஸ்பெசல் இது தான்!

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் ஒரே உறவு நட்பு மட்டும்தான் .


பல்வேறு சமயங்களில்  நம்முடைய பெற்றோர் ,கணவன், மனைவி , இல்லைகள் போன்றவர்களுடன் கூட பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை நாம் நம் நண்பர்களிடையே மட்டுமே பகிர்ந்து கொள்வோம் . 

தமிழ் சினிமாவில் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு சமமாக நண்பர்கள் சென்டிமென்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல்வேறு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது . 

கடந்த பல வருடங்களாகவே காதலர் தினம், மகளிர் தினம் , மதர்ஸ் டே போன்ற தினங்கள் எல்லாம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தாலும் உலகில் உள்ள உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடுவது ப்ரெண்ட்ஷிப் டே மட்டுமே.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் ஃப்ரெண்ட்ஷிப் டே  கொண்டாடப்பட்டது வருகிறது . இன்னும் மூன்று நாட்களே பிரண்ட்ஷிப் டேக்கு உள்ளதால் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களுக்கு மறக்காமல் வாழ்த்து கூற தயாராகி விடுங்கள் .