திடீரென மயங்கி சரிந்த தோனி! தாங்கிப் பிடித்த இருவர்! என்ன ஆனது? திக் திக் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்த ஐபிஎல் தொடரில் வீறுநடை போட்டு வருகின்றனர்.


11 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 8-ல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளனர். இதில் இரண்டு ஆட்டங்களில் தோனி விளையாடவில்லை கடந்த ஆட்டத்தில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்தித்தது.

இந்த போட்டியில் தோனி விளையாடவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தோனியால் விளையாட இயலவில்லை என்று அணியின் பயிற்சியாளர் பிளெமிங் கூறினார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு போட்டோ பரவியுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். அதாவது தோனியை இருவர் கைத்தாங்கி பிடித்திருப்பது போன்றுள்ளது.

இதைக்கண்ட ரசிகர்களால் சற்றும் தாங்க இயலவில்லை. தலைக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் ரசிகர்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர். அடுத்த ஆட்டத்திலாவது தலையை காண இயலுமா என்று இறைவனை வேண்டிக்கொண்டிருக்கினர்.