அமாவாசை மற்றும் திதி தினங்களில் மட்டும் மறந்தும் கூட வீட்டில் இதனை செய்யக்கூடாது!

பொதுவாக திதி தினங்களில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பிறகே வீட்டு வாசலில் கோலம் போடுவார்கள்.


காரணம் கோலம் என்பது தெய்வீக சக்திகளை வீட்டினுள் வரவழைக்கும் மந்திரக் கோடுகள்.  வீட்டு வாசலில் கோலமிடுவதால் முன்னோர்களின் ஆத்மா இந்த மந்திரக் கோடுகளைத் தாண்டி வீட்டினுள் வராது.  ஆகவே பித்ரு காரியங்களுக்கு உரிய இந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும்.


முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை பூஜை போன்ற தெய்வீக சம்மந்தமான எந்த காரியங்களையும் வீட்டில் செய்யக் கூடாது. மாமிசம் போன்ற கடின உணவுகள் உண்பதை தவிர்ப்பது நல்லது.  காரணம், விஞ்ஞான ரீதியாக அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒன்றிணைவதால் புவி மண்டலத்தில் உண்டாகும் ஒருவித அதிர்வலைகளால் மனித உடலில் செரிமான சக்தி குறைகிறது.


செரிமான சக்தி குறைவதால் உடலில் பலவித பிரச்சனைகள் உருவாகும் என்பதால் அசைவ உணவை அன்று தவிர்க்க வேண்டும்.