தோள்பட்டையில் எப்படியெல்லாம் பிரச்னைகள் வருகின்றன ??

தோள் பாதிப்பு என் றாலே, பல பேருக்கு “உறைந்த தோள்பட்டை’ பாதிப்பு தான் வரும். தோள்பட்டை இறுக்கமாகி, எந்த வகையிலும் தூக்க முடியாமல், பயன்படுத்த முடியாமல் போகும். அதற்கு பெயர் தான் “உறைந்த தோள் பட்டை’ .


இதுபோல் தோள் பட்டை தேய் மானத்தை சரி செய்ய நவீன முறையில், “மெட் டல் கப்’ பொருத்தப்படுகிறது. 

தோள்பட்டையில் அது நீண்ட நாள் பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்ல, குருத்தெலுபுகள் வளரவும் வழி வகுக்கிறது. குருத்தெலும்புகள் வளர்ந்து தோள் பட்டை பழைய படி ஆகி விட்டால், “மெட்டல் கப்’பை நீக்கி விடலாம்.

இந்த “மெட்டல் கப்’ எந்தவகையில் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. மாறாக, எலும்புகளையும், தசைநார்களையும் வளர அனுமதிக்கிறது.

இதன் மூலம், சில மாதங்களுக்கு பின், இயல்பான தோள் பட்டை மீண்டும் உயிர் பெற்று விடுகிறது’