முதியோர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ??

வயது அதிகரிக்கும்போது நீங்கள் தவறி விழ வாய்ப்புகள் அதிகம். எனவே உங்கள் வீட்டை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாதுகாப்பாக மாற்றுவது மிக முக்கியம்.


• வழுக்கும் இடங்களில் நடக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

• தினந்தோறும் உபயோகிக்கும் பொருட்களை குறிப்பிட்ட உயரத்தில் வைக்க வேண்டும். மிக உயரமான இடத்திலோ அல்லது வளைந்து எடுக்கும் இடத்திலோ வைப்பதைத் தவிர்க்க வேண்டும். 

• காரிடர் மற்றும் மாடிப்படிகளில் நல்ல வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

• போதிய பார்வைத் திறன் இருக்க, தொடர்ந்து கண் பரிசோதனை செய்துவர வேண்டும். 

• கால்சியம் மற்றும் விட்டமின் டி கொண்ட உணவு கட்டுப்பாடு அவசியம்