நாளுக்கு நாள் மோசமாகும் உடல் நிலை..! தீயாய் பரவிய தகவல்..! இந்த நேரத்தில் அமித் ஷாவே வெளியிட்ட தகவல்!

தனது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாக வருவதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல் வெறும் வதந்தி என்றும் தனக்கு எந்த நோயும் இல்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அந்த சமயம் முதல் அமித் ஷாவை பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பார்க்க முடியவில்லை. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும் கூட அமித் ஷா வெளியே தலைகாட்டவில்லை. நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டியது உள்துறை அமைச்சகத்தின் கடமை.

அந்த உள்துறை அமைச்சகத்தின் அமைச்சரான அமித் ஷா வெளியே தோன்றாதது பல்வேறு யூகங்களை எழுப்பியது. முதன் முறையாக அமித் ஷாவுக்கு கொரோனா என வதந்தி பரப்பப்பட்டது. அதன் பிறகு அமித் ஷாவிற்கு ஏதே மிகத் தீவிரமான நோய் என்றும் தகவல்களை பரப்பினர். மேலும் பிரதமர் மோடியுடன் அண்மையில் அமைச்சரவை கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் அமித் ஷா மிகவும் சோர்வாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி அமித் ஷாவின் உடல் நிலை மிக மிக மோசமாக இருப்பதாக தகவல்கள் பரவின. ஏற்கனவே பாஜக மூத்த தலைவர்கள் மனோகர் பாரிக்கர், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு காலமாகினர்.

இந்த நிலையில் அமித் ஷா உடல்நிலை மோசம் என்கிற தகவல் பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளை கவலையுறச் செய்தது. இதனால் அமித் ஷா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தான் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தனக்கு எவ்வித நோயும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முழு உடல் நலத்துடன் உள்துறை அமைச்சக பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருவதாகவும் அமித் ஷா கூறியுள்ளார். தனது உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தி என்றும் இது தனது கட்சி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்களை கவலை அடையச் செய்த காரணத்தினால் தான் விளக்கம் கொடுக்க நேரிட்டதாகவும் அமித் ஷா கூறியுள்ளார்.