இங்கிலாந்தை பந்தாடிய மேற்கிந்திய தீவுகள்!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.


இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை மேற்கிந்திய தீவுகள் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

இதனால் இங்கிலாந்து அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்சில் 187 ரன்களை மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணியின் பரிஸ்டோவ் 52 ரன்களும், மோயென் அலி 60 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் 4 விக்கெட்களும், கபீரேல் 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக விளையாடி 306 ரன்களை எடுத்தனர். அந்த அணியின் டேரன் பிராவோ 50 ரன்களும், கிரைக் ப்ராத்தவாட் 49 ரன்களும் எடுத்தனர். இதனால் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து அணியை விட முதல் இன்னிங்சில் 119  ரன்களை முன்னிலை பெற்றது. மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் 4 விக்கெட்களும், கபீரேல் 4 விக்கெட்களையும் சாய்த்தனர்.

 பின்னர் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சிலும் பேட்டிங்கில் சொதப்பியது. அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் 13 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. சிறப்பாக பந்து வீசிய கெமர் ரோச்சிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.