அதிர்நது மிரண்ட டாக்டர்கள்! இளம் பெண் வயிற்றில் ஒன்றரை கிலோ தங்கம்! வளையல்கள்! பதற வைக்கும் காரணம்!

கொல்கத்தா: இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து நகைகள், நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரை அவரது பெற்றோர் வீட்டிலேயே வைத்து கண்காணித்து வந்துள்ளனர்.

எனினும், வயிறு வலிப்பதாகச் சொன்னதை அடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அவரது வயிற்றில் சுமார் 1.5 கிலோ அளவுள்ள தங்க நகைகள், வளையல்கள், 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவற்றை எல்லாம் அறுவை சிகிச்சையின் மூலமாக தற்போது அகற்றியுள்ளனர். அந்த பெண் உடல்நலமாக உள்ளதாகக் கூறும் மருத்துவர்கள், 24 மணிநேரமும் அவரை கண்காணிப்பில் வைத்திருக்கும்படி பெண்ணின் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளனர்.