பொன்னார் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்..! – அமைச்சர் ஜெயகுமார் அதிரடி.

வரும் 2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டமைக்கு கட்சியைத் தாண்டி பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்து மழை பொழிகிறது என்று தெரிவித்தார் அமைச்சர் ஜெயகுமார்.


மேலும், திமுகவுடன் கூட்டணி குறித்து பாஜக மாநிலத் தலைவர் மேலிட தலைவர் கருத்துக் கூறினால் மட்டும் தான் அதிமுக தனது முடிவை தெரிவிக்கும். பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வதை கண்டுகொள்ள மாட்டோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

மேலும் அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி செய்த 17 ஆண்டுகளில் தமிழகத்தை படு பாதாளத்தில் தள்ளி விட்டதாகவும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பமாக திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பம் உருவாக்கியதுதான் திமுகவின் சாதனை என்றும் விவசாயிகளுக்கு எதிரான செயல் மற்றும் மீத்தேன் போன்ற திட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளை பாதிக்கக் கூடிய திட்டங்களை திமுக செய்ததாகவும் குற்றம் சாட்டினார்

தொடர்ந்து தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் எதிராகவே திமுக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை பெண்களுக்கு கடந்த காலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் என பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வரக்கூடிய காலங்களில் கட்சியின் அமைக்கப்பட உள்ள பல்வேறு குழுக்களுக்கும் பெண்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.