குழந்தைகளை இந்த வார்த்தைகளால் எக்காரணத்தைக்கொண்டும் திட்டாதீர்கள். அதன் விளைவு....

நாம் பொதுவாகவே, கோபமாக இருக்கும்போது குழந்தைகளையோ, மற்றவர்களையோ சனியனே என்று திட்டிவிடுவோம்.


சனீஸ்வரர் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் நல்லது, கெட்டதுக்கு தகுந்தாற்படி பலன் கொடுப்பார். ஆனால் அவரால் கிடைக்கும் நன்மையால் மகிழாமல், தீமையை மட்டுமே எண்ணி மக்கள் பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயரே மிஞ்சியது.

மனம் வருந்திய சனி, அக்னி வனம் எனப்படும் திருக்கொள்ளிக்காடு வந்து, சிவனை நினைத்து தவமிருந்தார். சிவன் தரிசனம் தந்து, சனீஸ்வரரை பொங்கு சனியாக மாற்றினார். இவர் அக்னீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.

சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு. அவ்வாறு வருகையில் சனி ஒருவரது எண்ணம், சொல், செயல் என்ற மூன்று விதத்தில் ஆக்ரமிப்பார். ஒருவரது எண்ணத்தில் சனியன் வந்துவிட்டால் அவரது வார்த்தைகளிலும் அதன் பிரதிபலிப்பு இருக்கும்.

அந்த வகையில் "சனியனே" என்ற சொல் மிகவும் ஆபத்தானது. ஒருவரது நாவில் இருந்து அந்த வார்த்தை வந்து விட்டால் சனி அடுத்து அவரது செயலிலும் வந்து விடுவார். இதனால் அந்த நபர் எண்ணிலடங்கா சோதனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும்.

வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால், ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு. மந்த கதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம். ஆனால் சனியனே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி, சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் எனபது ஐதீகம்.

மந்த கதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு சினீஸ்வரனின் அருள் கிடைக்கும். அதனால் சனியனே என்று யாரையும் திட்டிவிட வேண்டாம். கோபத்தில் சனியனே என்று திட்டிவிட்டு பின்பு அதற்காக வருத்தப்படுவதால் எந்த பலனும் இல்லை.

சனியன் என்ற வார்த்தைக்கு அடுத்தபடியாக சொல்லக்கூடாத மேலும் இரண்டு வார்த்தைகளும் உண்டு. அவை, மூதேவி - இது லட்சுமியின் சகோதரியைக் குறிக்கும். சொல்பவரையும் பாதிக்கும், சொன்னவரையும் அதிகம் பாதிக்கும். பின்பு மூதேவி நிரந்திரமாக நம்மிடம் குடியேறிவிடுவாள்.

பிரம்மகத்தி - இதனை பிராமண வீடுகளில் திட்டுவதற்கு அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தை கூறுவதால் பிரம்மகத்தி தோஷம் ஏற்படும்.