நரகத்தில் இருந்து சொர்க்கம் செல்கிறோம்! சுவற்றில் மரண சாசனம் எழுதிய முதிய தம்பதி! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்!

வயதான தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 70. இவருடைய மனைவியின் பெயர் சுவர்ணா. சுவர்னாவின் வயது 68. இத்தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகனுடைய வீட்டிலேயே இருவரும் தங்கி வந்தனர். 

பெற்ற மகனும் மருமகளும் அவர்களை மிகவும் கொடுமைபடுத்தியுள்ளனர். தினமும் இரவு இருவரும் தாமதமாக வீட்டிற்கு வருவார்கள். பின்னர் இரண்டு முதியவர்களையும் கண்டுகொள்ளாமல் சுற்றித்திரிவர். இதனால் கிருஷ்ணமூர்த்தியும், சுவர்னாவும் சொந்த வீட்டிலேயே அனாதையை போன்று உணர்ந்தனர். இவர்களின் மகள் அருகே வசிப்பதால், காலை வந்துவிட்டு மாலை 7 மணிக்கு அவருடைய வீட்டிற்கு சென்றுவிடுவார்.

இதனால் மிகவும் மனமுடைந்த முதியவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி நேற்று மாலை இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இரவு வீடு திரும்பிய போது மகனும் மருமகளும்  நெடுநேரமாகியும் வீட்டுக்கதவை தட்டி கொண்டிருந்தனர்.

வீடு உள்வழியாக பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது இருவரும் இரத்தம் சிந்திய வகையில் சடலமாக இருந்தனர். சுவற்றில் சில வாசகங்களும் இடம்பெற்றன. அதாவது, "நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு செல்கின்றோம்.

எங்களை நீங்கள் அனாதைகளை போன்று நடத்தினீர்கள். என் மகன் மற்றும் மருமகள் எங்களை கொன்றுவிட்டனர்" என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.