அவரெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே இல்லை! உதயநிதி யாரைச் சொல்றாருன்னு தெரியுமா?

பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவை நாங்கள் பொருட்டாகவே மதிக்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சில நாட்களுக்கு முன்னர் எச்.ராஜா  திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியிருந்தார். அதாவது ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட நிலைதான் விரைவில் ஸ்டாலினுக்கும் ஏற்படும் என்று கூறியிருந்தார். 15 நாட்களுக்கு முன்னர் சிதம்பரம் அவர்கள் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு ஏற்பட்ட நிலையே ஸ்டாலினுக்கும் விரைவில் ஏற்படும் என்று எச்.ராஜா கூறியிருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் உதயநிதி ஸ்டாலின் திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இது குறித்த கேள்விகள் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டபோது, "நாங்கள் எச்.ராஜாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை" என்று கூறினார்.

அதேபோன்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சமீபத்தில் நிகழ்ந்த விஜய்-ஸ்டாலின் சந்திப்பை விமர்சித்திருந்தார். "அவர் யாரை வேண்டுமென்றாலும் சந்திக்கட்டும். ஆனால் எங்களை அசைக்க முடியாது. என்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான்" என்று கூறியிருந்தார். 

இதுகுறித்து கேட்டபோது,  "அவருக்கு வேற வேலையேயில்லை!! ஏதாவது உளறிக்கொண்டே இருப்பார்." என்று பதிலளித்தார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.