நீச்சல் குளத்திற்கு நான் சென்றால்..! வெளியானது 37 வயது நடிகையின் புகைப்படம்..! யார் தெரியுமா?

பாலிவுட் நடிகை மோனாலிசா தன் வாழ்வில் தான் செய்யத் தவறிய விஷயங்களைப் பற்றியும் தன்னுடைய முந்தைய நினைவுகளை பற்றியும் பதிவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தவிர வேறு எந்த வழியும் கிடையாது என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இந்நிலையில் நடிகர் நடிகைகள் தங்களுடைய வீடுகளிலேயே ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகின்றனர்.

தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யும் நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவர் தங்களது இல்லங்களிலேயே உடற்பயிற்சிகளை செய்து அந்த வீடியோக்களை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு அவர்களது ரசிகர்களையும் இதை பின்பற்றுமாறு உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை மோனாலிசா தன்னுடைய வாழ்வில் தான் செய்ய நினைத்து தவறவிட்ட ஒரு சில விஷயங்களைப் பற்றியும் பழைய நினைவுகளை பற்றியும் தன்னுடைய ரசிகர்களிடம் பதிவுகளாக வெளியீட்டு இருக்கிறார். 

நடிகை மோனாலிசா துரோபேக் புகைப்படங்களாக பல புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதிலும் அவர் நீச்சல் உடை அணிந்து கொண்டு வாட்டர் பேபி என்று கமெண்ட் செய்தவாறு பதிவிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் ஒரு வன்மையான நீச்சலுடையில் அவர் அழகாக போஸ் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் மோனாலிசா காரில் செல்லும் போது தன் கணவர் விக்ராந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், அலங்கார அறையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் விமானத்தில் செல்பி எடுத்த புகைப்படம் என பல சிறப்புமிக்க புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்திருக்கிறார்.

மேலும் ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலையில் நேரத்தை எவ்வாறு உபயோகமாக பயன்படுத்திக் கொள்வது என பலவிழிப்புணர்வு தரக்கூடிய வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் அதுமட்டுமில்லாமல் வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பதிவையும் பல நாட்களாக ரசிகர்களின் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.