ஒல்லியாகணுமா ! உடலின் தேவையற்ற கொழுப்பை குறைக்கணுமா! இதோ கொள்ளின் மூலம் எளிமையான வழி

கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது தமிழ் மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு.


·          புரதம் நிறைந்த கொள்ளு உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரிபார்க்கவும் உதவுகிறது.

·          கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.

·          வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்  கொள்ளு பயன்படுகிறது.

மூல நோய், ருமாட்டிசம்,  இருமல் மற்றும் சளியை விரட்டவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் கொள்ளுவைப் பயன்படுத்தலாம்.